நெல்லை அருகே ஆடு திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது; போலீசார் அதிரடி
நெல்லை அருகே பத்தமடை பகுதியில் ஆடு திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம், பத்தமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜமால் முகைதீன் என்பவர் ஆடு, புறா, கோழிகளை வளர்த்து பத்தமடை பகுதியில் திருநீலகண்ட தெருவில் கசாப்புக் கடை வைத்து தொழில் செய்து வருகிறார்.
இவர் ஆடுகளை 6.8.2021 அன்று தோட்டத்தில் அடைத்துவிட்டு சென்றுள்ளார். 07.8.2021 அன்று தோட்டத்தில் சென்று பார்த்த போது ஒரு ஆடு திருடுபோயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஜமால் முகைதீன் அருகில் விசாரித்ததில் பத்தமடையைச் சேர்ந்த அர்ஜுன்(27), கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த அமரஜோதி(22) ஆடு திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து ஜமால் மூகைதீன் பத்தமடை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ரோடாபாய் ஜெயசித்ரா விசாரணை மேற்கொண்டு ஆடு திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்களையும் கைது செய்தார்.