அம்பாசமுத்திரம் அருகே ரயிலில் அடிபட்டு 15 ஆடுகள் சாவு

அம்பாசமுத்திரம் ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 15 ஆடுகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-04-19 10:59 GMT

ரயிலில் அடிபட்டு உயிரிழந்த ஆடுகள்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் ரயில் நிலையம் அருகே நெல்லையிலிருந்து தாம்பரத்திற்கு செல்லும் ரயிலில் இன்று காலை 10 மணிக்கு ரயில்வே லைனில் மேய்ந்து கொண்டிருந்த 15 ஆடுகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தன. ஆறு ஆடுகள் மட்டுமே ரயில்வே டிராக்கில் கிடந்தது.மற்ற ஆடுகளை உரிமையாளர்கள் தூக்கி சென்று விட்டனர்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News