நெல்லை:சொரிமுத்து அய்யனார் கோவில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

நெல்லை மாவட்டம் மலைப்பகுதியில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு அரசு அனுமதி அளிக்காததால் வனத்துறையினர் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.

Update: 2021-07-05 14:09 GMT

நெல்லை மாவட்டம் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று முதல் சுவாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள  காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தொடர்ந்து தடை விதித்துள்ளது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்: சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிப்பது குறித்து அரசிடம் இருந்து தங்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை.அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்  என தெரிவித்தனர்.

Tags:    

Similar News