புறநகர் காவல் நிலையங்களில் நெல்லை மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வு.

நெல்லை காவல் நிலையங்களுக்கு வரும் புகாரின் அடிப்படையில் உடனடி விசாரணை நடத்தி தீர்வு காண காவல்துறையினருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுரை.

Update: 2021-07-05 14:03 GMT

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புறநகர் காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு.பொதுமக்களிடம் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங் களில் திடீரென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கனிவாகவும், அவர்களுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.காவலரை கண்டு பொதுமக்கள் அங்கம்மாள் தயங்காமல் தங்களுடைய பிரச்னைகளை கூற முன்வரவேண்டும்.

மேலும் பொதுமக்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் உடனடியாக விசாரணை செய்து பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என காவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் இந்த கொரோனா காலகட்டத்தில் காவலர்கள் நோய்த்தொற்றிலிருந்து தங்களை‌ பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதில் அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ், காவல் நிலைய ஆய்வாளர் சங்கர் கண்ணன், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகேசன், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராதா, மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News