நெல்லை-உழவர்களுக்கு மண்வள அட்டை வழங்கும் விழா.

உழவர்கள் மண் வள அட்டையில் பரிந்துரைப்படி உரமிடுவதால் செலவினங்கள் மிச்சமாகும் என வேளாண்மைத்துறை அறிவுரை வழங்கி உள்ளது.

Update: 2021-07-01 07:30 GMT

சேரன்மகாதேவியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் சார்பாக உழவர்களுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டது. 

சேரன்மகாதேவியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் சார்பாக உழவர்களுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் சார்பாக மண்வள அட்டை வழங்கும் விழா கரம்பையில் நடைபெற்றது, வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திர பாண்டியன் தலைமையேற்று விவசாயிகளுக்கு மண் வள அட்டைகளை வழங்கினார். அவர் பேசுகையில், 'விவசாயிகள் மண்ணின் தன்மையை அறிந்து கொண்டு மண்வள அட்டையில் பரிந்துரைத்தப்படி உரமிட்டு சாகுபடி செய்தால், செலவுகளை குறைத்து கூடுதல் மகசூல் பெறலாம்' என்றார்.

Tags:    

Similar News