மத்திய பீடித்தொழிலாளர்கள் மருத்துவமனை --அமைச்சர் தொடங்கி வைத்தார்.

கொரோனா மையமான மத்திய அரசு மருத்துவமனை.

Update: 2021-05-18 11:05 GMT

நெல்லை மாவட்டம் முக்கூடலில் உள்ள மத்திய பீடித்தொழிலாளர்கள் மருத்துவமனையில் 175 படுக்கைகள் கொண்ட கொரோனா பாதித்தவர்கள் பராமரிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதன் செயல்பாட்டை தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தொடங்கி வைத்தார்.

நெல்லை மாவட்டம் முக்கூடலில் மத்திய அரசின் சார்பில் கட்டப்பட்ட பீடித்தொழிலாளர்கள் நல மருத்துவனை உள்ளது. இதில ஒரு பகுதி மட்டுமே செயல்பட்டு வந்தது. மற்றப்பகுதிகள் பயன்படுத்தப்படாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு பராமரிப்பு இன்றி கிடந்தது.

இந்நிலையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அரசின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொண்டு பீடித்தொழிலாளர்கள் நல மருத்துவமனையை சுத்தம் மற்றும் பராமரிப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்து 175 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மற்றும் பராமரிப்பு மையமாக மாற்றி உள்ளது.

இந்த சிகிச்சை மையத்தை தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து, மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள வசதிகள் , சிகிச்சைக்காக வைக்கப்பட்டுள்ள உபகரணங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார் . மேலும் நோய் பாதித்தவர்களுக்கு எளிமையாக மூச்சு பயிற்சி அளிக்கும் வகையில் யோகாசனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் அமைச்சர் முன்னிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்படும் யோகா முறைகளை செய்து காட்டினர் .தொடர்ந்து நடுகல்லுரில் நடைபெற்ற சளி , காய்ச்சல் , மூச்சுத்திணறல் கண்டறியும் முகாமினையும் பார்வையிட்டார்

முன்னதாக அமைச்சர் தங்கம்தென்னரசு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பல ஆண்டுகளா செயல்படாமல் இருந்த மத்திய பீடித்தொழிலார்கள் நல மருத்துவமனை , மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போர்க்கால் அடிப்படையில் சீரமைக்கப்பட்டு 175 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

இங்கு ஆக்சிஜன் செரிவூட்டல் மெஷின் மூலம் ஆக்சிஜன் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கு தேவைய மருத்துவர்கள் , செவிலியர்கள் ஆகியோர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் , மருத்துகளும் தேவையான அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவையைக் கருத்தில் கொண்டு எங்கிருந்து எல்லாம் ஆக்சிஜன் இங்கு கொண்டு வரமுடியுமோ, அந்த முயற்சியும் , நமது பகுதியிலேயே எங்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியுமோ அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது

நமது மாவட்டத்தில் கூடன்குளம் , முனைஞ்சிபட்டி, திசையன்விளை , பணகுடி ஆகிய பகுதிகளில் கொரோனா சிகிச்சை பராமரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது, நோய் தொற்றை குறைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் , தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாபன் , மாவட்ட ஆட்சியர் வி'ஷ்ணு , சார் ஆட்சியர் பிரதிக்தயாள், மற்றும் மருத்துவர்கள் சுகாதாரத்துறையினர்கள் கலந்து கொண்டனர் .

Tags:    

Similar News