ட்ரோன் கேமரா - கண்காணிப்பு பணியில் காவலர்கள்.
நெல்லை ட்ரோன் டீம் நண்பர்கள் .
அம்பாசமுத்திரத்தில்ட்ரோன் கேமரா மூலம் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நீதிமன்றம் மற்றும் பிரதான பகுதிகளில் தற்போது கொரோனா இரண்டாம் அலை தொற்று பரவாமல் தடுக்க அரசு ஊரடங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதனால் பொது மக்கள் அத்யாவசிய தேவையின்றி வெளியே திரிவோர்.மற்ற ஏதேனும் கேளிக்கைகளில் ஈடுபடுவோரை கண்காணிக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின்படி அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தலைமையில் நெல்லை ட்ரோன் டீம் நண்பர்கள் மூலம் ட்ரோன் கேமரா உதவியுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இதில் அம்பாசமுத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சைமன் சாம் பாகூர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் அன்ன ஜோதி, பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் கண்காணிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
வாகனத்தில் அத்யாவசிய தேவையின்றி இபாஸ் இன்றி அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வந்தனர்.எந்த ஒரு பாகுபாடின்றி அனைத்து வாகனங்களையும் மிகவும் கவனமாக பரிசோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
#ட்ரோன்கேமரா #தமிழ்நாடு #கொரோனா #ஊரடங்கு #கண்காணிப்பு #police #tamilnadu #nellai #ambasamuduram #drone #corona #coronavirus #Instanews #அபராதம் #fine