அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Update: 2021-03-16 09:15 GMT

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக சேரன்மகாதேவி சப்கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது சேரன்மாதேவி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வேட்பாளர் இசக்கி சுப்பையாவுக்கு மேளதாளங்கள் முழங்க வெடி வெடித்து வரவேற்பளித்தனர். தொடர்ந்து சேரன்மகாதேவி சப்கலெக்டர் பீரதீக் தயாளிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Tags:    

Similar News