திருநெல்வேலி டவுனில் காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு திருநெல்வேலி மாநகர காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டவுன் ஆர்ச் பகுதியில் தொடங்கி கீழரதவீதி, தெற்குரதவீதி, மேற்குரதவீதி, தொண்டர் சன்னதி, பாறையடி ஆகிய பகுதிகள் வரை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.கொடி அணிவகுப்பில் திருநெல்வேலி மாநகர காவல் துணைஆணையர் சீனிவாசன், டவுண் உதவி ஆணையாளர் சதீஷ்குமார், ஆயுதப்படை உதவி ஆணையாளர் முத்தரசு, டவுண் காவல் ஆய்வாளர் ராமேஸ்வரி மற்றும் காவல் ஆளினர்கள் மத்திய துணை ராணுவபடையினர் பங்கு பெற்றனர்.