ரயில் பயணிகளுக்கு இது முக்கியம்.. இனி வாட்ஸ் ஆப் மூலம் உணவு ஆர்டர்
ஆன்லைன் வாயிலான உணவை தற்போது வாட்ஸ் ஆப் மூலமாகவும் முன்பதிவு செய்யும் புதிய சேவையைத் தொடங்கியது.;
பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி, ரயில் பயணிகள் ஆன்லைன் வாயிலான உணவை தற்போது வாட்ஸ்-அப் தகவல் மூலம் முன்பதிவு செய்யும் சேவையைத் தொடங்கியுள்ளது.
வாடிக்கையாளருக்காக +91-8750001323 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை அறிவித்துள்ளது. இ-கேட்டரிங் சேவைகளை வாடிக்கையாளரை மையமாகக் கொண்டதாக மாற்றுவதற்கு ஒரு படி மேலே, இந்திய ரயில்வே சமீபத்தில் இரயில்வே பயணிகளுக்கு இ-கேட்டரிங் சேவைகள் மூலம் உணவை ஆர்டர் செய்ய வாட்ஸ்அப் தொடர்பைத் தொடங்கியுள்ளது. இதற்காக வணிக வாட்ஸ்அப் எண் +91-8750001323 தொடங்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், வாட்ஸ்அப் கம்யூனிகேஷன் மூலம் இ-கேட்டரிங் சேவைகளை இரண்டு நிலைகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. முதல் கட்டத்தில், www.ecatering.irctc.co.in என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம், இ-கேட்டரிங் சேவைகளைத் தேர்வுசெய்வதற்காக, பிசினஸ் வாட்ஸ் ஆப் எண் வாடிக்கையாளர் முன்பதிவு செய்யும் மின்-டிக்கெட்டுக்கு ஒரு செய்தியை அனுப்பும்.
ஆன்லைன் வாயிலான உணவை வாட்ஸ் ஆப் மூலம் பெறும் வசதி குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளரின் பின்னூட்டம், கருத்துக்களின் அடிப்படையில், மற்ற ரயில்களிலும் இந்த வசதியை நிறுவனம் வழங்கும்.
www.catering.irctc.co.in மற்றும் அதனுடைய செயலி மூலம் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக நிறுவனம் மின்னணு வாயிலாக உணவு வழங்குதல் சேவையைத் தொடங்கியது.
ஆன்லைன் மூலம் பயணச்சீட்டை முன்பதிவு செய்த இந்த வாடிக்கையாளருக்கு வாட்ஸ் ஆப் எண் அனுப்பி வைக்கப்படும். அதன் மூலம் பயணிகள் தாங்கள் செல்லும் வழியில் உள்ள ரயில் நிலையங்களின் உணவகங்களைத் தேர்வு செய்து தேவையான உணவை முன்பதிவு செய்ய முடியும்.
தற்போது ஐஆர்சிடிசியின் இணையதளம் மற்றும் செயலி வாயிலாக நாள்தோறும் சுமார் 50 ஆயிரம் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.