திருப்பதி கோவிலுக்கு நிகராக திருச்செந்தூர் கோயிலில் கட்டமைப்புகள் உருவாக்கப்படும் -அமைச்சர் சேகர்பாபு உறுதி
திருத்தணி, சமயபுரம், ராமேஸ்வரம், பழனி போன்ற ஊர்களில் உள்ள திருக்கோவில்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் -அமைச்சர் சேகர்பாபு
சென்னை காலடிப்பேட்டையில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான கல்யாண வரதராஜர் பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திருச்செந்தூருக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதனால் 200 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பதி கோவிலுக்கு நிகராக திருச்செந்தூர் கோயிலில் கட்டமைப்புகள் உருவாக்கப்படும். மேலும் ஒரே நேரத்தில் 5000 பக்தர்கள் வந்தால் கூட பிரத்தியேக வசதி ஏற்படுத்தி அவர்களை வரிசையாக அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்தநிலையில் திருச்செந்தூர் கோவிலில் மட்டுமல்லாமல் திருத்தணி, சமயபுரம், ராமேஸ்வரம், பழனி போன்ற ஊர்களில் உள்ள திருக்கோவில்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.