திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சூரசம்காரம் விழா ஏற்பாடுகள் தீவிரம்
திருச்செந்தூர் திருக்கோயில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறுகிறது.;
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சூரசம்காரம் விழாவை முன்னிட்டு வெள்ளி அங்கியில் இன்று சிறப்பாக காட்சி தரும் சூரசம்காரமூர்த்தி.
தமிழ் கடவுளின் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 4ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறுவதையொட்டி முருகப்பெருமான் சூரபதுமனை வதம் செய்வதற்காக யானை சிங்கம் சூரன் உள்ளிட்ட தலைகள் திருவாடுதுறை ஆதீன மண்டபத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கோவிலில் வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இன்று மாலையில் நடைபெற கூடிய சூரனை வதம் செய்யும் சூரசம்காரம் மற்றும் நாளை நடைபெறவுள்ள திருக்கல்யாண நிகழ்விற்கும் பக்தர்கள் கலந்து கொள்வதற்கோ தரிசனம் செய்வதற்கோ , அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சூரசமகாரம் நடைபெறக்கூடிய கோவில் கடற்கரை நுழைவாயில் முகப்பு பகுதியில் தகரங்கள் கொண்டு தற்காலிக கூடாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. பக்தர்கள் யாரும் உள்ளே அனுமதி கிடையாது. ஆனால் எதற்காக இப்படி தகரம் வைத்து அடைத்துள்ளனர்.. இப்படி அடைப்பது விழா நடைபெறுவதற்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் என பக்தர்கள், ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிகின்றனர்.