பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தாத அதிமுக அரசு
பெட்ரோல் - டீசல் விலை உயர்வை குறைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தாத அதிமுக அரசு தேர்தலில் மக்களுக்கு ஏமாற்று வாக்குறுதிகளை அளித்து வருகிறது.என்று பெரியகுளம் திமுக வேட்பாளர் குற்றம் சாட்டினார்
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற (தனி) தொகுதி திமுக வேட்பாளர் சரவணக்குமார் இன்று தனது பரப்புரையை பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் மேற்கொண்டார்.
வடகரையில் உள்ள 1 முதல் 15 வார்டு வரை உள்ள அனைத்து பகுதிகளில் திறந்த வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டார். இதில் நகர் பகுதியில் பல இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்து தாரை தப்பட்டை மேளங்கள் முழங்க கட்சியினர் வரவேற்றனர்.
அப்போது அங்கு கூடி இருந்த பெண்களிடம், பெட்ரோல், டீசல், மற்றும் கேஸ் விலையை மத்திய அரசு உயர்த்திய போது, அதனை குறைப்பதற்கு வலியுறுத்தாத அதிமுக அரசு. தேர்தலில் மக்களை ஏமாற்றுவதற்காக வெற்று வாக்குறுதிகளை அளித்து வருகிறது. தற்பொழுது உள்ள அனைத்து விலை ஏற்றத்திற்கும் காரணம் அதிமுக, பாஜக அரசுதான்,
மக்கள் நலனை கருத்தில் கொள்ளாத அதிமுக, பாஜக அரசுகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமயிலான ஆட்சி அமைந்திட வேண்டும்.
அதற்கு உதயசூரியன் சின்னத்தில் தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் எனவும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள அனைத்து திட்டங்களையும்.
கொரோன நிவாரண நிதியாக அனைவருக்கும் 4000 ரூபாய் உள்ளிட்ட அனைத்தும் உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேன் . கிராம பகுதிகளின் அடிப்படை தேவைகளை எந்த பாகுபடு இன்றி நிறைவேற்றுவேன் என வாக்குறுதி கொடுத்து திமுக வேட்பாளர் சரவணக்குமார் பரப்புரையில் ஈடுபட்டார்.இந்த பரப்புரையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்று திமுக தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.