பெரியகுளம் அருகே பலத்த காற்றுடன் மழை வாழை சேதம்
பெரியகுளம் அருகே பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சுமார் 50000த்திற்க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்து சேதமடைந்தது. விவசாயிகள் கவலையடைந்தள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சொக்கதேவன்பட்டி, சக்கரைபட்டி, சாவடிபட்டி, வடபுதுப்பட்டி, கோம்பைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை விவசாயம் வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலையில் பெரியகுளம் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சொக்கத்தேவன்பட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் மழையினால் 2 கோடி ரூபாய் மதிப்பிற்கும் மேலான சுமார் 50ஆயிரம் வாழை மரங்கள் முற்றிலும் ஒடிந்து விழுந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், வங்கிகளில் நகைகளை அடகு வைத்து கடன் வாங்கி தான் வாழை விவசாயம் செய்து வந்தோம். பயிரிட்ட வாழை பிஞ்சு பருவம் மற்றும் பூவாக உள்ள நிலையில் சூறாவளி காற்றினால் முழுவதும் சேதம் ஏற்பட்டுள்ளதால் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலையை உரிய கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.