பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம்: ஓ.பி.எஸ் வடம் பிடித்தார்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தார்.

Update: 2021-03-26 18:30 GMT

தேனி மாவட்டம் பெரியகுளம் வராகநதியின் தென்கரையில் பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 19ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ஆம் நாள் திருவிழாவான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. சுவாமி அலங்கரிக்கப்பட்டு திருத்தேருக்கு எழுந்தருளினார்.

அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அருள்மிகு சோமாஷ்கந்தரும் சிறிய தேரில் அருள்மிகு பாலசுப்பிரமணியன் வள்ளி தெய்வானையுடனும் சுவாமிகள் எழுந்தருளினர். திருத்தேர் தேரடி திடலை விட்டு கிளம்பி கச்சேரி ரோடு, கீழரதவீதி, தெற்குரதவீதி, வழியாக நகர்வலம் வந்து நிலையடைந்தது.

இந்த தேரோட்டத்தை தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். பெரியகுளம் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் ஆயிரக்கணக்கனோர் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்

Tags:    

Similar News