துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்துடன் வாக்களித்தார்

அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் - வாக்களித்த துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி.;

Update: 2021-04-06 04:10 GMT

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள செவன்த்டே நர்சரி பள்ளியில், தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது வாக்கினை பதிவு செய்தார். உடன், அவரது தாயார் பழனியம்மாள், மனைவி விஜயலெட்சுமி இளையமகன் ஜெயபிரதீப், மற்றும் தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி ஆகியோரும் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News