பெரியகுளத்தில் மனைவியின் தவறான உறவை தட்டிக்கேட்ட கணவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(55). இவரது மனைவியான மீனா (45)வுக்கு பெரியகுளம் யோகபாலன்(19), தங்கப்பாண்டி ஆகிய இரண்டு இளைஞர்களுடன் முறையற்ற பழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களது தொடர்பை அறிந்த முருகன், தனது மனைவி உள்பட மூவரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இரண்டு இளைஞர்களும், முருகனை கொலை செய்ய திட்டமிட்டு கடந்த சில நாட்களாக பின் தொடர்ந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முருகனை, பின்தொடர்ந்த யோகபாலன், தங்கப்பாண்டி தனது நண்பர்கள் சின்னமணி(19), ரத்தினமுத்து(19) மற்றும் மாரியப்பன் (எ) சூர்யா(21) ஆகியோரது உதவியுடன் பாட்டிலால் தலையில் அடித்தும், கத்தியால் கழுத்தில் குத்தி படுகாயத்தை ஏற்படுத்தியாக பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர், யோகபாலன், சின்னமணி, ரத்தினமுத்து மற்றும் மாரியப்பன் (எ) சூர்யா ஆகிய 4பேரை இன்று கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள தங்கப்பாண்டியை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.