கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்

சுருளிப்பட்டி கிராம ஊராட்சி தலைவரை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி கவுன்சிலர்கள் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2021-08-03 10:45 GMT

கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்திய கவுன்சிலர்கள்.

தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றியம் சுருளிப்பட்டி கிராம ஊராட்சி தலைவராக இருப்பவர் நாகமணி வெங்கடேசன். துணைத்தலைவராக ஜெயந்திமாலா மாயாண்டி உள்ளனர்.

ஊராட்சி நிர்வாகத்தில் தலைவரின் கணவர் தலையீடு அதிகமாக இருப்பதாகக் கூறி, கடந்த ஆறு மாதங்களாக வார்டு உறுப்பினர்கள் அனைவரும் புகார் எழுப்பி வந்தனர். தங்கள் கிராமத்திற்கு ஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடமும் புகார் கூறினர்.

இந்நிலையில் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கம்பம் ஊராட்சி ஒன்றியத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பி.டி.ஓ.,க்கள் கோதண்டபாணி, ஜெயகாந்தன், கம்பம் தெற்கு போலீஸ் எஸ்.ஐ., ஜெயக்குமார் ஆகியோர் முற்றுகையிட்ட வார்டு உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கையினை கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தனர்.

பின்னர், மூன்று மணி நேரம் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தை வார்டு உறுப்பினர்கள் விலக்கிக் கொண்டனர்.

Tags:    

Similar News