தேனி மாவட்டத்தில் நெல் நடவு பணிகள் மும்முரம் : 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி

தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பகுதியில் நெல் நடவுப்பணிகள் நடந்து வருகின்றன.

Update: 2021-07-08 07:30 GMT

தேனியில் நெல் நடவு பனி மும்முரமாகியுள்ளது.

தேனி:

தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக சாகுபடிக்கு நெல் நடவுப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

முல்லை பெரியாறு பாசனம் மூலம் தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. முதல் போக சாகுபடிக்கு கடந்த ஜூன் முதல் வாரம் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது . இதனை தொடர்ந்து விவசாயிகள் நாற்றங்கால் வளர்த்து நெல் விதைப்பு செய்தனர்.  தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் நெல் நடவுப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கூடலுார் முதல் தேனி,பழனிசெட்டிபட்டி வரை நடவுப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பிலும் நெல் நடவுப்பணிகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் நிறைவு பெறும் என தேனி வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News