திராட்சை தோட்டத்தில் திருடியவர்கள் கைது
கம்பம் அருகே கோகிலாபுரத்தில் திராட்சை தோட்டத்தில் திருடிய மூன்று பேரை ராயப்பன்பட்டி போலீசார் கைது செய்தனர்.;
மாதிரி படம்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் கோகிலாபுரத்தைச் சேர்ந்தவர் தீபாவளி ராஜ்(48). இவர் அப்பகுதியில் அமமுக ஒன்றிய செயலாளராக உள்ளார். இவருக்கு ஆனைமலையன்பட்டியில் திராட்சை தோட்டம் உள்ளது. தோட்டத்திற்கு பந்தல் போடுவதற்காக 60 கிலோ கட்டு கம்பிகள், 100 அடி நீளமுள்ள டைமன் கம்பிகள், 3000 அடி நீளமுள்ள சொட்டுநீர் பாசன குழாய்கள் வாங்கி தனது தோட்டத்தில் உள்ள அறையில் வைத்திருந்தார்.
இந்த பொருட்களை நேற்று இரவு யாரோ திருடிச் சென்று விட்டனர். சம்பவம் குறித்து தீபாவளிராஜ் ராயப்பன்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த பொருட்களை திருடியதாக ஆனைமலையன்பட்டியைச் சேர்ந்த மல்லையன் சாமி (46), முத்தையா (41), அய்யனார் (28) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.