நெற்பயிரை காப்பீடு செய்யலாம்: தேனி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

தேனி மாவட்ட விவசாயிகள் தங்களது நெற்பயிரை காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் முரளீதரன் அறிவுறுத்தியுள்ளார்

Update: 2021-11-10 08:15 GMT

நடவு பணிகள் முடிந்த வயல்களில் களைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள். இடம்: கம்பம் பள்ளத்தாக்கு.

தேனி மாவட்ட விவசாயிகள் வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் தங்களது நெற்பயிரை காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் முரளீதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவல்:  தேனி மாவட்டத்தில் இரண்டாம் போக நெல் நடவுப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. முதல் போக அறுவடை பணிகளும் நடக்கிறது. தேனி மாவட்டத்தில் இப்கோ-டோக்கியோ என்ற நிறுவனம் பயிர்காப்பீடு வசதிகளை வழங்குகிறது. விவசாயிகள் ஒரு ஏக்கர் நெல் பயிரை 488 ரூபாய் 25 பைசா காப்பீடு செய்து ரசீது பெற்றுக் கொள்ளலாம். இழப்பீடு ஏற்பட்டால் முழு காப்பீடு தொகையும் விவசாயிகளுக்கு கிடைக்கும்.

இ-சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தில் முதல் பக்க நகல் இவற்றை கொடுத்து பதிவு செய்து, காப்பீடு தொகைக்கான பிரிமீயத்தை கட்டி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் இந்த பணிகளை விவசாயிகள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News