முல்லை பெரியாறு அணையில் நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியை தாண்டியது

முல்லை பெரியாறு அணையில் ஒரே நாளில் 170 மி.மீ., மழை பெய்துள்ளது. அணைக்கு நீர் வரத்து வுிநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியை தாண்டி உள்ளது.

Update: 2021-10-17 08:27 GMT
கேரளாவில் பெய்து வரும் மழையால் முல்லை பெரியாறு அணை நீர் நிரம்பிக்காணப்படுகிறது.

தேனி, இடுக்கி மாவட்டங்களில் நேற்றுமுதல் கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி முல்லை பெரியாறு அணையில் 170 மி.மீ., தேக்கடியில் 126 மி.மீ., கூடலுாரில் 77.4 மி.மீ., உத்தமபாளையத்தில் 32.2 மி.மீ., வீரபாண்டியில் 32 மி.மீ., போடியில் 17.6 மி.மீ., மழை பதிவானது.

இந்த மழையால் முல்லை பெரியாறு அணைக்கு விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடிக்கும் அதிக நீர் வந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு மணி நேரமும் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துக்கொண்டே உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

அணை நீர் மட்டம் 131.30 அடியாக உள்ளது. வைகை அணைக்கு விநாடிக்கு 2000ம் கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் மட்டம் 55.68 அடியாக உள்ளது.

Tags:    

Similar News