கம்பம் பகுதியில் சிட்கோ, நவீன அரிசி ஆலை அமைக்க இடம் தேர்வு

தேனி மாவட்டம், கம்பம் தொகுதியில், சிட்கோவும், நவீன அரிசி ஆலையும் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2021-09-29 13:15 GMT

கம்பம் அருகே காமாட்சிபுரத்தில், சிட்கோ அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை கலெக்டர் முரளீதரன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதியில்,  தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகத்தின் தொழில்பூங்கா (சிட்கோ)  அமைக்கவும், நவீன அரிசி ஆலை அமைக்கவும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறுதொழில் வளர்ச்சி கழகத்தின் தொழில்பூங்கா,  20 ஏக்கர் பரப்பில் காமாட்சிபுரத்தில் அமைகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வணிக கழகத்தின் நவீன அரிசி ஆலை, ஆனைமலையான்பட்டி கிராமத்தில் 20 ஏக்கர் பரப்பில் அமைகிறது. இந்த இடங்களை கலெக்டர் முரளீதரன், டி.ஆர்.ஓ.,ரமேஷ், கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., கவுசல்யா உட்பட பலர், இன்று ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News