அத்துமீறும்கேரளஅமைச்சர்கள்:தமிழகமுதல்வர் தடுத்துநிறுத்தக்கோரி விவசாயிகள் கடிதம்

அணையின் கட்டுப்பாடு தமிழகத்திடம் இருக்கும்போது, கேரள அமைச்சர்கள் தினமும் முல்லைபெரியாறு அணைக்கு வந்து ஆய்வு செய்கின்றனர்;

Update: 2021-11-02 04:15 GMT

நீர் நிரம்பி காணப்படும் முல்லை பெரியாறு அணை.

முல்லை பெரியாறு அணைக்குள் அத்துமீறி நுழைந்து தினமும் ஆய்வு நடத்தும் கேரள அமைச்சர்களை தடுத்து நிறுத்துங்கள் என ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ராஜசேகர், ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் மற்றும் நி்ர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கேுறிப்பிட்டுள்ளளதாவது:

முல்லை பெரியாறு அணை குறித்த தீர்ப்பு அக்., 29ம் தேதி தான் வெளியானது. ஆனால் அக்., 27ம் தேதியே கேரள அரசு இடுக்கி மாவட்டம் முழுவதும் முல்லை பெரியாறு அணை வரும் அக்., 29ம் தேதி திறக்கப்படும் என ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்தனர். அணையின் கட்டுப்பாடு முழுமையாக தமிழகத்திடம் இருக்கும் போது, கேரள அமைச்சர்கள் தினமும் முல்லை பெரியாறு அணைக்கு வந்து ஆய்வு செய்கின்றனர். கேரள அரசியல் பிரமுகர்கள் 150க்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்து தண்ணீரை திறக்கின்றனர்.

தமிழக அரசின் அதிகாரிகள், தேனி கலெக்டர், தமிழக பத்திரிக்கையாளர்கள் என யாரையும் இவர்கள் அணைக்குள் அனுமதிக்கவில்லை. தற்போது தேக்கடியில் அறை எடுத்து முகாமிட்டு தினமும் அணைக்கு சென்று பார்வையிட்டு, தண்ணீர் திறப்பை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். கடந்த 15 நாட்களாக கேரளா செய்து வரும் அத்துமீறல்களை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. முல்லை பெரியாறு அணையில் கேரள போலீசார் பாதுகாப்பிற்கு நிற்பதால் (அவர்களுக்கு சம்பளம் தருவது தமிழக அரசு) தமிழக அரசு அதிகாரிகளாலும் எதுவும் செய்ய முடியவில்லை.

அணையின் உரிமைகளை முற்றிலும் இழந்து விட்டோமோ என்ற அவநம்பிக்கை ஏற்படுகிறது. எல்லா விஷயங்களிலும் மிகச்சிறப்பாக செயல்படும் தமிழக அரசு முல்லை பெரியாறு அணை விஷயத்தில் பெரும் சறுக்கலை சந்தித்து விட்டது. தமிழகத்தின் இறையாண்மையை இழந்து விட்டது. இந்த நிலையை மாற்ற தமிழக முதல்வர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அணைக்குள் தேவையில்லாமல் நுழையும் கேரள அரசியல் பிரமுகர்கள், கேரள அமைச்சர்களை தடுத்து நிறுத்த வேண்டும். அணையின் உரிமைகளை முழுமையாக மீட்டு எடுக்க வேண்டும்.

இதே நிலை நீடித்தால் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள நான்கு லட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசாக மாறி விடும். தற்போது அணை நீர் மட்டம் குறைந்த விட்டதால் 2 லட்சம் ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. இவ்வாறு கூறியுள்ளனர்.

Tags:    

Similar News