தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டத்தில் நேற்று பரவலாக அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-10-25 03:26 GMT

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் கம்பம் தொட்டமான்துறை முல்லை பெரியாற்றில் வெள்ளம் சீறிப்பாய்கிறது.

தேனி மாவட்டத்தில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. தேனி அரண்மனைப்புதுாரில் 27.6 மி.மீ., ஆண்டிபட்டியில் 4.2 மி.மீ., வைகை அணையில் 4.6 மி.மீ., வீரபாண்டியில் 4 மி.மீ., உத்தமபாளையத்தில் 9.1 மி.மீ., கூடலுாரில் 4.6 மி.மீ., மழை பதிவானது.

மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கும் மேல் தொடரும் மழையால் முல்லை பெரியாறு, கொட்டகுடி ஆறு, வைகை ஆறு, வராகநதி, மஞ்சளாறு என அத்தனை ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக விவசாய பணிகள் மாவட்டம் முழுவதும் சுறுசுறுப்புடன் நடந்து வருகின்றன.

Tags:    

Similar News