அரிசிக் கொம்பன் யானை புகுந்ததால் கம்பம் நகரில் 144 தடை உத்தரவு அமல்

கம்பம் நகருக்குள் புகுந்த அரிசிக் கொம்பன் யானையை வனம், காவல், நகராட்சித் துறையினர் இணைந்து கண்காணித்து வருகின்றனர்;

Update: 2023-05-27 08:30 GMT

தேனி மாவட்டம் கம்பன் நகருக்குள் புகுந்த அரிசிக்கொம்பன் யானை

கம்பம் நகருக்குள் இன்று அதிகாலையில் நுழைந்த அரசிக்கொம்பன் யானை சுமார் பத்து மணி நேரமாக தங்கியிருப்பது பொதுமக்களை  அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. யானை முகாமிட்டுள்ளதால் அதை வனப்பகுதிக்கு விரட்டுவதற்கு ஏதுவாக கம்பன் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

கேரள வனப்பகுதியில் இருந்து  நேற்று இரவு கூடலுார் கழுதைமேட்டு வனப்பகுதிக்குள் இருந்த யானை அங்கிருந்து வனப்பகுதி ஓரமாக வந்து தனியார் மாதுளை தோட்டத்திற்குள் புகுந்தது. பின்னர் மலையடிவாரம் வழியாக வந்து இன்று காலை கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட நடராஜன் திருமண மண்டபம் பின்புறம் உள்ள குடியிருப்புக்குள் நுழைந்தது.

தொடர்ந்து  கம்பம் மெட்டு மலைப்பகுதியை கடந்து  இன்று காலை  4  மணியளவில் கம்பம் கூழத்தேவர் தெருவிற்குள் நுழைந்து அங்கு ஒருவரை தாக்கியது. பின்னர் கிருஷ்ணாபுரம் வந்து, அங்கிருந்து கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் வீடு அமைந்துள்ள தெரு வழியாகஊழவர் சந்தை வழியாக  தற்போது மின்வாரிய குடியிருப்பு அருகிலுள்ள புளியமரத்தடியில் இளைப்பாறி வருகிறது. 

இந்த யானை தாக்கியதால் இதுவரை 24  பேர் உயிரிழந்துள்ளனர். அப்படிப்பட்ட மூர்க்க குணம் கொண்ட யாருக்கும் கட்டுப்படாத  அரிசிக்கொம்பன் யானை, சுமார் ஒரு லட்சம் மக்கள் வசித்து வரும் கம்பன் நகருக்குள் புகுந்து சுமார் ௧௦ மணி நேரமாக முகாமிட்டிருப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்றால் மிகையில்லை. 

இதனிடையே யானையின் பசியைப் போக்குவதற்காக இப்பகுதி விவசாயிகள் தென்னை மரக்கிளைகள், பசுந்தாள் மரக்கிளைகள், வாழைத்தார், வாழை மரங்களையும் வனத்துறையினர் மூலம் கொடுத்து வருகின்றனர். யானை நகருக்குள் இருப்பதால், பொதுமக்கள் யாரும்  தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என நகராட்சி நிர்வாகமும், காவல்துறையும், வனத்துறையினரும் இணைந்து எச்சரித்து வருகின்றனர்.

இந்த யானையை தமிழக வனத்துறையினர் பின்தொடர்வதால் இதுவரை உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒருவர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த அரிசிக்கொம்பன் யானையால் மேலும் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் யானையின் அடுத்த நகர்வுகள் குறித்து முன்று துறையினரும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பிற்பல் 3 மணிக்கு மேல், கும்கி யானை வரவழைக்கப்பட்டு  தேவாரம் மலைப்பகுதிக்கு கொண்டு சென்று  அங்கிருந்து மூணாறு மலைப்பகுதிக்குள் அனுப்பி வைக்க தமிழக வனத்துறை திட்டமிட்டுள்ளனர்.

கம்பத்தில் 144 தடை உத்தரவு அமல்:

கம்பம் நகருக்குள் அரிசிக்கொம்பன் யானை புகுந்ததால், மக்கள் பாதுகாப்பு கருதி கம்பம் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவும், வெளி நபர்கள் கம்பம் நகருக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. கம்பம் நகரில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

கம்பம் எம்எல்ஏ- அறிக்கை: இன்று கம்பம் நகரில் அரிசிக் கொம்பன் யானை ஊருக்குள் புகுந்து சேதப்படுத்திய விளைவுவாக பால்ராஜ் என்பவர் தாக்கப்பட்டதால்  ஏற்பட்டுள்ள  பதற்றத்தை தணிக்கு வகையில் தொலைப்பேசி மூலமாக தமிழ்நாடு முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றார்.  வனத்துறை அமைச்சர் கம்பம் சட்டமன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டு அரிசிக் கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தியும் கும்கி யானை வரவழைத்து அரிசிக் கொம்பன் யானை பிடிக்க போர்கால அடிப்படை ல் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு விடப்பட்டுள்ளது என்றும் அதற்கான சிறப்பு குழுவினர் கம்பம் விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன்  தெரிவித்துள்ளர்.

Tags:    

Similar News