மலைவாழ் மக்களுக்கு சமூக அமைப்புகள் சார்பில் கொரோனா நிவாரணப்பொருட்கள்

தேனி மாவட்டத்தில் மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன.

Update: 2021-07-13 09:00 GMT

தேனி மாவட்டத்தில் மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

தேனி மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை தடுப்பு நடவடிக்கைக்காக போடப்பட்ட ஊரடங்கால் மலைக்கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மலைக்கிராம மக்களுக்கு இன்னும் வாழ்வியல் ஆதாரங்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் வறுமையின் பிடியில் தவிக்கும் மக்களுக்கு பல்வேறு சமூக அமைப்புகள் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இன்று காலை கூடலுார் தேனீக்கள் அறக்கட்டளை சார்பில் லோயர்கேம்ப்பில் வசிக்கும் ஏழை மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சமையலுக்கு தேவைப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட சமையல் பொருட்கள் வழங்கப்பட்டன. குமுளி போலீஸ் எஸ்.ஐ.,பாண்டியராஜன், ஆசிரியர்கள் தேன்மலர், வல்லபன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மயிலாடும்பாறை கிராமத்தில் லா தொண்டு நிறுவனம், தன்னார்வலர் அன்பில் சுந்தரபாரதம், கிராம வார்டு உறுப்பினர் பூப்பாண்டியம்மாள், சுரேஷ்பாண்டி, நாகராஜ், தமிழ்செல்வி, ஆகியோர் இணைந்து நிவாரண உதவிப்பொருட்களை வழங்கினர்.

Tags:    

Similar News