கொரோனா தளர்வு: புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

கொரோனா தளர்வுகளுக்கு பின்னர் வந்த முதல் புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் வழிபட்டனர்

Update: 2021-10-16 06:15 GMT

போடிஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் நிற்கும் பக்தர்கள்.

தேனி மாவட்டத்தில் கொரோனா தளர்வுகளுக்கு பின்னர் இன்று புரட்டாசி மாதம் வந்துள்ள சனிக்கிழமை என்பதால் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்.வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கடந்த 4 புரட்டாசி சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.



கொரோனா தளர்வுகளுக்கு பின்னர் புரட்டாசி மாதம் வந்து முதல் சனிக்கிழமையும் கடைசி சனிக்கிழமையும் இன்றுதான். அடுத்த வாரம் ஐப்பசி மாதம் பிறக்கிறது.

எனவே இந்த புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலுடன், தேனி மாவட்டத்தில் உள்ள  அத்தனை பெருமாள் கோயில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.போடி சீனிவாசப்பெருமாள் கோயில், ஆண்டிபட்டி கதலி நரசிங்கப்பெருமாள்கோயில்,கம்பம் கம்பராயபெருமாள் கோயில்களில் சுமார் 2 கி.மீ., துாரம் வரை பக்தர்கள் கூட்டம்  நீண்டு காணப்பட்டது.

Tags:    

Similar News