தேனி மாவட்ட உள்ளாட்சிகளில் ஆயுதபூஜை கொண்டாட்டம்
தேனி மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சிகளிலும் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.;
தேனி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ஆயுதபூஜைகள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அனைத்து உள்ளாட்சிகளிலும் இன்று பகல் முழுக்க குப்பை சேகரித்த பின்னர், துப்புரவு பணியாளர்கள் உள்ளாட்சி வாகனங்கள், குப்பை சேகரிக்கும் வாகனங்களை சுத்தம் செய்தனர். மாலை 4 மணிக்கு மேல் அந்த வாகனங்களுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள் என அனைத்து உள்ளாட்சிகளிலும் பூஜைகள் நடத்தப்பட்டு துப்பரவு பணியாளர்களுக்கு சுண்டல், பொறி, பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.