போடியில் பஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் கஞ்சா புகைக்கும் வீடியோ வைரல்

போடி பஸ்ஸ்டாண்டில் மாணவர்கள் கஞ்சா புகைக்கும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2021-11-27 02:46 GMT

பைல் படம்.

போடி பஸ் ஸ்டாண்ட்டில் பள்ளி மாணவர்கள் சீருடையில் அமர்ந்து கஞ்சா புகைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போடியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் பள்ளி மாணவர்கள் சீருடையில் அமர்ந்து கஞ்சா புகைக்கும் வீடியோவை எடுத்துள்ளார். தேனி மாவட்டம் முழுவதும் சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதனை பார்க்கும் பலரும், மாவட்ட எஸ்.பி., இதனை எப்படி வேடிக்கை பார்க்கிறார்? இதனை எஸ்.பி., நிச்சயம் தடுக்க வேண்டும். அவரது நேரடி பார்வையில் மாவட்டம் முழுவதும் கஞ்சா ரெய்டு நடத்தி, மாணவர்களுக்கு கஞ்சா போய் சேருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News