தேனி அருகே பூப்பாறையில் யானை மிதித்து பெண் பலி, வனத்துறை விசாரணை
தேனி அருகே பூப்பாறையில் எஸ்டேட் வேலை முடித்து வீடு திரும்பிய பெண் யானை மிதித்து பலியானார். இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.;
தேனி மாவட்ட எல்லையில் உள்ள கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் பூப்பாறை என்ற ஊரில் வசித்து வருபவர் சிரஞ்சீவி. இவரது மனைவி விமலா.
இவர்களுக்கு பூப்பாறையில் தலைக்குளம் என்ற இடத்தில் எஸ்டேட் உள்ளது. நேற்று தனது எஸ்டேட்டில் வேலை முடித்து வீடு திரும்பிய விமலா, திரும்பும் வழியில் ஒற்றை யானையிடம் சிக்கிக் கொண்டார்.
யானை மிதித்து சம்பவ இடத்திலேயே பலியானார். விமலாவை தேடிச் சென்ற அவரது குடும்பத்தினர், விமலா நசுங்கிய நிலையில், யானை மித்து இறந்து கிடப்பதை கண்டனர்.
வனத்துறைக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர். இடுக்கி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.