தேனி மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு பின்னர் வாரச்சந்தைகள் திறக்கப்பட்டுள்ளன

தேனி மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு பின்னர் வாரச்சந்தைகளை திறந்து நடத்த தேனி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.;

Update: 2021-07-13 08:30 GMT

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் மிகவும் குறைந்து விட்டதால், மாவட்டம் முழுவதும் வாரச்சந்தைகள் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் மிகவும்  குறைந்துள்ளதால் வாரச்சந்தைகளை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. தேவாரத்தில் நேற்று முதல் வாரச்சந்தை தொடங்கப்பட்டுள்ளது. இன்று தேவதானப்பட்டியில் நடைபெற்றது . நாளை சின்னமனுாரில் நடைபெறவுள்ளது.

மாவட்டத்தில் தேவாரம், கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார், போடி, ஆண்டிபட்டி, தேவதானப்பட்டி, தேனி என ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு நாள் வாரச்சந்தைகள் நடக்கும். கொரோனா பரவலை தடுக்க இந்த வாரச்சந்தைகள் செயல்பட மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது. தற்போது பரவல் குறைந்து விட்டதால், மாவட்டம் முழுவதும் அனைத்து ஊர்களிலும் வாரச்சந்தைகளை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று திங்கள் கிழமை தேவாரத்தில் முதல் வாரச்சந்தை கூடியது. இன்று தேவதானப்பட்டியில் நடந்து வருகிறது. நாளை ஆண்டிபட்டி, நாளை மறுநாள் சின்னமனுார், சனிக்கிழமை தேனி என ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கிழமை சந்தை நடைபெறும். ஏற்கெனவே எந்தெந்த கிழமைகளில் எந்தெந்த ஊர்களில் சந்தை கூடியதோ அதே நாட்கள் மற்றும் கிழமைகளில் சந்தை வழக்கம் போல் நடைபெறும். கடைகள் சமூக இடைவெளி விட்டு அமைக்கப்படும். பொதுமக்கள் முககவசம் அணிந்து தான் சந்தைக்கு வர வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News