தேனி மாவட்டத்திலிருந்து கேரளா செல்லும் வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு

போடியில் இருந்து கேரளாவிற்கு செல்லும் வாகனங்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்;

Update: 2021-10-04 07:00 GMT

பைல் படம்

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கேரளாவிற்கு தினமும் வேலைக்கு செல்கின்றனர். இவர்களை சுமார் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும் ஏற்றிச் சென்று திரும்புகின்றன. இதில் போடி வழித்தடத்தில் மட்டும் 250க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த வாகனங்களின் உரிமையாளர்கள், டிரைவர்கள், கேரள தோட்ட நிர்வாகிகள், தொழிலாளர்களின் சங்க பிரதிநிதிகளை அழைத்து, போடி டி.எஸ்.பி., சுரேஷ் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

 கூட்டத்தில் மலைச்சாலையில் அதிவேகமாக பயணிக்க கூடாது. ஒரு ஜீப்பில் 12 பேர் வரை மட்டுமே பயணிக்க வேண்டும். குழந்தை தொழிலாளர்களை ஏற்றிச் செல்லக்கூடாது. போலி லைசென்ஸ் வைத்து வாகனங்களை ஓட்டினால் கைது செய்யப்படுவார்கள். போடியில் இருந்து மூணாறு செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் தனித்தனி அடையாள எண் போலீஸ் மூலம் வழங்கப்படும். இந்த அடையாள எண் மூலம் வாகனத்தின் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளும் வகையில் பதிவுகள் செய்யப்படும் என டி.எஸ்.பி., சுரேஷ் தெரிவித்தார். டி.எஸ்.பி., விதித்த கட்டுப்பாடுகளை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதில், போடி டவுன் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, குரங்கனி எஸ்.ஐ., ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். 

Tags:    

Similar News