போடிநாயக்கனூர் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு

சிலமலை கிராமத்தில் இன்று காலை குளத்தில் மாட்டை குளிப்பாட்டிக்கொண்டிருந்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்;

Update: 2021-10-16 05:15 GMT

பைல்படம்

தேனி மாவட்டம், போடி அருகே சிலமலை கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் ராம்( 16.)  இவர் இங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இன்று விடுமுறை என்பதால் வீட்டில் வளர்த்து வந்த மாட்டை குளிப்பாட்ட மணியம்பட்டி பகுதியில் உள்ள சப்பாணி குளத்திற்கு சென்றிருந்தார். குளத்தில் இறங்கி மாட்டை குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது,  எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்த போடி தீயணைப்பு படையினர் வந்து மாணவன் உடலை மீட்டனர். போடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News