போடியில் 2022 பனைமரக்கன்றுகள் நடவு

போடியில் 2022ம் ஆண்டை வரவேற்கும் வகையில் 2022 பனைவிதைகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2021-09-29 02:45 GMT

போடி சூலப்புரம் கிராமத்தில் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி பனைவிதைகளை நடவு செய்தார்.

தேனி மாவட்டம், போடியில் 2022ம் ஆண்டை வரவேற்கும் விதமாக சூலப்புரம் கிராமம் மற்றும் சுற்றுப்பகுதியில் 2022 பனைமரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

போடி டவுன் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, போடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ரவீந்திரநாத், எஸ்.ஐ.,க்கள் வேல்மணிகண்டன், பாஸ்கரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மரக்கன்றுகளை பாராமரித்து வளர்க்கும் பணி, சூலப்புரம் கிராம நுாறுநாள் வேலை திட்ட பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் இக்குழுவினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News