பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியில் நெல் கொள்முதல் மையம் திறப்பு
விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்;
பெரியகுளம் கெங்குவார்பட்டி நெல்கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய விவசாயிகள் அறுவடையான நெல்லை குவித்து வைத்துள்ளனர்.
பெரியகுளம் கெங்குவார்பட்டியில் நெல் கொள்முதல் மையம் இன்று திறக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள 400 ஏக்கருக்கும் அதிக பரப்பளவு கொண்ட வயல்களில் கடந்த 20 நாட்களாக நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. விவசாயிகள் இந்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். கொள்முதல் மையம் திறக்கப்பட உள்ள இடத்தில் நெல்லை குவித்து வைத்தனர்.தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் முரளீதரன் உடனடியாக இன்று முதல் நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இன்று முதல் நெல் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் அறுவடையான நெல்லை இந்த கொள்முதல் மையத்தில் கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு நுகர்பொருள்வணிப கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.