அணைப்பிள்ளையார் அணையில் இருந்து மீனாட்சிபுரம் கண்மாய்க்கு நீர் திறப்பு

தேனி மாவட்டம், போடி அணைப்பிள்ளையார் அணையில் இருந்து மீனாட்சிபுரம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

Update: 2021-10-05 04:15 GMT

வறண்டு போனதால் மீன்கள் செத்து மிதந்த போடி மீனாட்சிபுரம் கண்மாய்க்கு கொட்டகுடி ஆற்றில் அணைப்பிள்ளையார் அணையில் இருந்து தண்ணீர்  திறந்து விடப்பட்டுள்ளது.

போடி கொட்டகுடி ஆற்றின் குறுக்கே அணைப்பிள்ளையார் கோயில் அணை உள்ளது. இங்கிருந்து போடி மீனாட்சிபுரம் கண்மாய்க்கு நீர் செல்லும். ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் வறண்டதால், மீன்கள் செத்து மிதந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கொட்டகுடி ஆற்றில் அணைப்பிள்ளையார் கோயில் அணையில் இருந்து மீனாட்சிபுரம் கண்மாய்க்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். கொட்டகுடி ஆற்றில் குறைந்த நீர் வரத்து உள்ளதால், பொக்கலைன் மூலம் சிறு கால்வாய் போல் வெட்டி கண்மாய்க்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது. ஓரிரு நாளில் கண்மாய் நீர்மட்டம் ஒரளவு திருப்தியான உயரத்தை எட்டி விடும். எனவே மீன்கள் இறப்பது தடுக்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News