சின்னமனுாரில் தீயணைப்பு நிலையம் திறப்பு; 40 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்

தேனி, சின்னமனுாரில் 40 ஆண்டு கோரிக்கையினை ஏற்று இன்று தீயணைப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.;

Update: 2021-08-30 14:45 GMT

சின்னமனுார் தீயணைப்பு நிலைய திறப்பு விழாவில் கலெக்டர் முரளீதரன் தலைமையில் அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

தேனி மாவட்டத்தில் 8 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. ஆனால் மாவட்டத்தின் மையப்பகுதியில் சின்னமனுார் அமைந்துள்ளது. சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு வாகன விபத்து, தீ விபத்து, இதர தொழிற்சாலை விபத்துகள் ஏற்பட்டால் மீட்டுப்பணிக்கு அருகில் உள்ள பகுதியில் இருந்து தான் தீயணைப்ப வாகனங்கள் வர வேண்டும்.

இதில் பல நடைமுறை சிக்கல்கள் இருந்தன. எனவே தங்கள் பகுதிக்கு தனி தீயணைப்பு நிலையம் வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், 40 ஆண்டுகால மக்களின் கோரிக்கையை ஏற்று இன்று தீயணைப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த தீயணைப்பு நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக  திறந்து வைத்தார்.

Tags:    

Similar News