போடி அருகே மனைவி கண்டித்ததால் நகராட்சி அலுவலர் தற்கொலை

மனைவி கண்டித்ததால் போடி நகராட்சி அலுவலக ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-01-08 00:15 GMT

தேனி மாவட்டம், போடி வ.உ.சி.,நகர் மேற்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன், 46. இவரது மனைவி முருகேஸ்வரி, 43. இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் மணம் முடித்து வெளியூர்களில் வசிக்கின்றனர். மாரியப்பன் மது, புகையிலை பழக்கம் கொண்டவராக இருந்துள்ளார். இதனை அவரது மனைவி முருகேஸ்வரி கண்டித்து வந்துள்ளார். இருப்பினும் மாரியப்பன் திருந்தவில்லை.

நேற்று மாரியப்பன்,  குடித்து விட்டு வந்த போது, அவரது மனைவி அவரை கண்டித்ததோடு, கோபத்தில் அவருடன் பேச மறுத்துள்ளார். இதனால் மனம் உடைந்த மாரியப்பன்,  வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News