பால் பாக்கியை வழங்க வலியுறுத்தி போடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் செய்த பாக்கி பணத்தை வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது;
தமிழ்நாடு பால்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக ஆவின் நிர்வாகத்தை எதிர்த்து இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, போடி தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சஞ்சீவ்குமார், தேனி மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன் மற்றும் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர்.ஆவின் நிர்வாகம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த பாலுக்கு உரிய பணத்தை உடனடியாக வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தில் பால் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவின் மூலம் கலப்பு தீவனம் 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.