காெள்ளை பாேன சாமி சிலைகளை மீட்க வலியுறுத்தி இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
வேதபுரி தட்ஷிணாமூர்த்தி கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளை மீட்டு தரக்கோரி இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம்.;
தேனி அருகே உள்ள வேதபுரி தட்ஷிணாமூர்த்தி கோயிலில் 9 சாமி சிலைகள் கொள்ளை போயின. இந்த சிலைகளை கண்டுபிடித்து தருமாறு இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனியில் இருந்து அரண்மனைப்புதுார்- சத்திரப்பட்டி- வீரபாண்டி செல்லும் ரோட்டில் அரண்மனைப்புதுாரை அடுத்து உள்ளது தட்ஷிணாமூர்த்தி கோயில். இந்த கோயிலில் இருந்த 9 ஐம்பொன் சிலைகள் காணாமல் போயின. பழனிசெட்டிபட்டி போலீசார் இந்த வழக்கில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் விரைவாக விசாரணை நடத்தி காணாமல் போன சாமி சிலைகளை கண்டுபிடித்து தர வேண்டும் என வலியுறுத்தி இந்து எழுச்சி முன்னணி சார்பில் தேனி எஸ்.பி., அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார். இந்து எழுச்சி முன்னணியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.