போடி பகுதியில் பலத்த மழை: அணைப்பிள்ளையார் அணையில் வெள்ளப் பெருக்கு

இன்று காலை போடி, போடி மெட்டு, குரங்கனி, டாப்ஸ்டேஷன் பகுதியில் பலத்த மழை பெய்ததால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

Update: 2021-10-21 10:00 GMT

போடி பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் அணைப்பிள்ளையார் அணையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

போடி பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைப்பிள்ளையார் அணையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை போடி, போடி மெட்டு, குரங்கனி, டாப்ஸ்டேஷன் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் கொட்டகுடி ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆறு போடிக்குள் நுழையும் இடத்தில், அணைப்பிள்ளையார் அணையினை கடந்து செல்கிறது. இந்த அணையினை சுற்றுலாதலமாக மாற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், இன்று காலை பெரும் வெள்ளம் இப்பகுதிக்கு  வந்தது. அணைப்பிள்ளையார் அணையில்  நீர் நிரம்பி வெளியே அருவி போல கொட்டியது. இதனை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News