தேனி -போடி தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தேனி, போடி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2021-10-20 14:30 GMT

தேனி- போடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தேனியில் இருந்து போடியை கடந்து மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மதுரை- தேனி- போடி- மூணாறு தேசிய நெடுஞ்சாலை கொச்சி வரை செல்கிறது. இந்த சாலையி்ல் தேனியில் இருந்து போடி வரை 16 கி.மீ., துாரத்திற்குள் 5க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

போடியிலும் நகரின் மத்தியில் இந்த ரோடு செல்கிறது. வழியோர கிராமங்களிலும், போடி நகரிலும் இந்த ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமித்து கடைகள், வீடுகள் கட்டியிருந்தனர். தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை, போலீஸ்துறை அதிகாரிகள் இணைந்து,  இந்த ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர். மீட்கப்பட்ட இடங்களில் ரோடு அமைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News