தேனி அருகே மலைவாழ் மக்களிடம் உணவு வாங்கி சாப்பிட்ட மாவட்ட ஆட்சியர்

போடி சிறைக்காடு மலைக்கிராமத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மலைவாழ் மக்களிடம் உணவு வாங்கி சாப்பிட்டார்.

Update: 2021-07-29 03:00 GMT

போடிநாயக்கனூர் அருகே உள்ள மலைவாழ் மக்களிடம் உரையாடும் ஆட்சியர் முரளிதரன்.

தேனி கலெக்டர் முரளிதரன் மாவட்டம் முழுவதும் சென்று கிராம மக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டு தீர்வுகாண முயற்சித்து வருகிறார். போடி அருகே மலைப்பகுதியில் உள்ள சிறைக்காடு என்ற மலைக்கிராமத்திற்கு அவர் சென்றிருந்தார். அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அங்குள்ள மக்கள் தங்களுக்கு குடிநீர், மின்சாரம், ரோடு, தெருவிளக்கு, சாக்கடை வசதிகள் வேண்டும். வீடு கட்ட அரசு நிதி உதவி வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அதனை நிறைவேற்றித்தருவதாக உறுதி அளித்த கலெக்டர், கொரோனா தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி, தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். பின்னர் திடீரென மலைவாழ் மக்களிடம் 'எனக்கு சாப்பிட ஏதாவது தருவீர்களா?' என கேட்டார். அவர்கள் கொடுத்த உணவை சிறிது சாப்பிட்டு நன்றாக உள்ளது என பாராட்டினார்.

Tags:    

Similar News