தேனியில் போலீஸ் தாக்கியதாக கூறி வாலிபர் மருத்துவமனையில் அனுமதி
போலீஸ் தாக்கியதாக கூறி டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்த வாலிபர், தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;
தேனி மாவட்டம், தேவாரம் அருகே டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ், இவர், சந்தகேத்தின் அடிப்படையில் கோம்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரை போலீஸ் காவலில் வைத்து அடித்துள்ளனர்.
இதனால் பலத்த காயம் அடைந்ததாக கூறி சதீஷ் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சதீஷ் கூறியதாவது: நான் என் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக கோம்பைக்கு சென்றேன். அப்போது போலீசார் என்னை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். ஸ்டேஷனில் நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்தனர். நெஞ்சு, வயிறு பகுதியில் ஷூ காலால் கடுமையாக உதைத்தனர்.
இதில் நான் ரத்தவாந்தி எடுத்தேன். பலத்த காயத்துடன் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். எனது உறவினர்கள் கோம்பை போலீசார் மீது கலெக்டரிடம் புகார் செய்துள்ளனர் என்றார்.