போடி அருகே தோட்டத்து கிணற்றில் மீன் பிடித்த சிறுவன் தவறி விழுந்து பலி

தேனி மாவட்டம் போடி ஒத்தவீடு அருகே கிணற்றின் சுவரில் அமர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து பலியானான்

Update: 2021-07-25 04:15 GMT

கிணற்றில் தவறி விழுந்து பலியான சிறுவன்

தேனி மாவட்டம், போடி அருகே கோடாங்கிபட்டி கிராமம் ஒத்தவீட்டு பகுதியில் வசிப்பவர் திரவியம். இவரது மகன் அகிலேஷ், வயது ஏழு.

இவன் இங்குள்ள தனியார் தோட்டத்து கிணற்றின் சுவரில் அமர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தான். அந்த கிணறு 50 அடி வரை ஆழம் கொண்டது. தற்போது மழைக்காலம் என்பதால் நாற்பது அடிவரை தண்ணீர் உள்ளது. இந்நிலையில் மீன்பிடிக்கும் ஆர்வத்தில் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்த சிறுவன் தவறி உள்ளே விழுந்தான்.

உடன் இருந்த சிறுவர்கள் கிராம மக்களுக்கு தகவல் கொடுத்தனர். கிராம மக்கள் போடி தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத்துறையினர் வந்து சிறுவன் உடலை மீட்டனர். பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News