மின்சாரம் பாய்ந்து உடல் கருகிய கேங்மேன்: ஆபத்தான நிலையில் சிகிச்சை
போடியில் பணியின் போது மின்சாரம் பாய்ந்து உடல் கருகிய கேங்மேன் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.;
போடி சில்லமரத்துப்பட்டியில் பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் கேங்மேன் காளிதாஸ்( 21 ), உடல் கருகி ஆபத்தான நிலையில் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போடி ஜக்கம்பட்டி கம்பர்தெருவை சேர்ந்த காளிதாஸ், 21 என்பவர் இங்குள்ள மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேன் ஆக பணிபுரிந்து வருகிறார். இன்று இவர் சில்லமரத்துப்பட்டியில் பெட்ரோல் பங்க் எதிரே எல்.டி., லைனை ஆப் செய்து விட்டு பணி செய்து கொண்டிருந்தார். பணி முடிந்து நிமிரும் போது அதன்மேலே சென்ற ஹைச்.டி., லைன் மூலம் காளிதாஸ் உடலில் மின்சாரம் பாய்ந்தது. உடல் கருகிய நிலையில் துாக்கி வீசப்பட்ட காளிதாஸ், 70 சதவீத தீக்காயத்துடன் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.