திற்பரப்பு அருவி போல் மாறுகிறது போடி அணைப்பிள்ளையார் அணை
போடியில் கொட்டகுடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைப்பிள்ளையார் அணை திற்பரப்பு அருவி போல புதுப்பிக்கப்பட்டு வருகிறது;
தேனி மாவட்டம், போடியில் உள்ள அணைப்பிள்ளையார் அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவி போல் கட்டப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம், போடி குரங்கனி மலைப்பகுதியில் உருவாகும் கொட்டகுடி ஆறு போடி, தேனி வழியாக வைகை ஆற்றில் இணைகிறது. இந்த ஆறு போடியில் அணைப்பிள்ளையார் கோயில் அருகில் உள்ள இடத்தில் மிகவும் மணல் பரப்பான விசாலமான ஆறாக வருகிறது. இந்த இடத்தில் அருவி போல் தண்ணீர் கொட்டுகிறது. இந்த இடத்தை சுற்றுலாதலமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அணைக்கரைப்பட்டி அணையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரும். அந்த தண்ணீர் திற்பரப்பு அருவியில் விழுவது போல் விழுந்து பொதுமக்கள் குளிக்க வசதியாக படிக்கட்டுகளில் அருவி தண்ணீர் விழுவது போல் கட்டப்பட்டு வருகிறது. இந்த அணைக்கட்டின் மூலம் போடியில் பகுதியில் உள்ள கண்மாய்களுக்கும் தண்ணீர் திறக்கும் வசதியும் உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் இப்பணி முடிவடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.