பெரியகுளம் தாலுகாவில் நடந்ததைப் போல் போடி தாலுகாவிலும் நிலமோசடி புகார்

போடி தாலுகா அலுவலகத்தில் நில உச்சவரம்பு திட்டத்தின் கீழ் நிலங்கள் வழங்கிய ஆணவங்கள் காணவில்லை என விவசாயிகள் புகார்

Update: 2021-10-13 23:01 GMT

பைல் படம்

பெரியகுளம் தாலுகாவில் பலநுாறு ஏக்கர் அரசு தரிசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்ததை போல் போடி தாலுகாவிலும் நடைபெற்றுள்ளதாக  விவசாயிகள் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.

பெரியகுளம் தாலுகாவில் பலநுாறு ஏக்கர் அரசு தரிசு நிலங்கள் தனியாருக்கு பட்டா போட்டு தாரை வார்க்கப்பட்டுள்ளன. இந்த நிலங்களை அதிரடியாக மீட்ட கலெக்டர் மோசடியில் ஈடுபட்ட இரண்டு தாசில்தார் உட்பட 8 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளார். தற்போது பெரியகுளம் தாலுகாவில் போலி பட்டா வழங்கிய விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், போடி பகுதி விவசாயிகள் தேனி கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பெரியகுளம் தாலுகாவில் நடைபெற்றதை போல், போடி தாலுகாவிலும் மோசடி நடைபெற்றுள்ளது. குறிப்பாக போடி, வடக்குமலை, ஊத்தாம்பாறை, அகமலை, கொட்டகுடி, சிலமலை, ராசிங்காபுரம் கிராமங்களில் நில உச்சவரம்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிலங்களுக்கான ஆவணங்கள் முழுமையாக காணாமல் போய் உள்ளன. இந்த ஆவணங்களை தேடி கண்டுபிடித்தால், பல நுாறு ஏக்கர் நில மோசடி தெரியவரும். கலெக்டர் இந்த பிரச்னையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

Similar News