போடி மின்வாரியத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு; சிக்கிய உதவிப்பொறியாளர்

போடி மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் உதவிப்பொறியாளர் சிக்கினார்.;

Update: 2021-09-02 10:30 GMT

போடி மின்வாரிய உதவிப்பொறியாளர் அலுவலகம்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகர் பகுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளராக பணிபுரிபவர் சுருளியப்பன். இவரிடம் அதே நகரை சேர்ந்த மகேந்திரன் என்பவர் 8 மாதங்களுக்கு முன்பு மின்கம்பத்தை இடம் மாற்றித்தர மனு செய்திருந்தார். இதற்காக 22 ஆயிரம் ரூபாய் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், பணம் கொடுத்து எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் மின் கம்பத்தை இட மாற்றம் செய்யாததால், மகேந்திரன் உதவி செயற்பொறியாளர் சுருளியப்பனை தொடர்பு கொண்டார். அப்போது சுருளியப்பன் மேலும் 7 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே மின்கம்பத்தை இடம் மாற்ற முடியும் என கூறினார்.

இதனால் தேனி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., கருப்பையாவை தொடர்பு கொண்டு மகேந்திரன் புகார் அளித்தார். டி.எஸ்.பி.,யின் அறிவுரைப்படி வேதிப்பொருள் தடங்கிய நோட்டுக்கள் 5 ஆயிரம் ரூபாயினை மகேந்திரன் உதவிப்பொறியாளரிடம் கொடுத்தார். உதவிப்பொறியாளர் சுருளியப்பன் நோட்டுக்களை வாங்கி எண்ணும் போது, மறைந்திருந்த டி.எஸ்.பி., மற்றும் போலீசார் கையும் களவுமாக சுருளியப்பனை பிடித்தனர்.தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News